2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' | ஷங்கரின் ‛வேள்பாரி' படத்தில் தனுஷ் நடிக்கிறாரா...? | 'கைதி 2' விரைவில் டீசருடன் அறிவிப்பு | பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை |

பொதுவாகவே போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அடிக்கடி நடிக்க வேண்டும் என ஆர்வம் காட்டும் சினிமா ஹீரோக்கள், வக்கீலாக நடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அந்த கதாபாத்திரத்திற்காக பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டும் என்பதுடன், அதில் ஆக்சன் காட்சிகளுக்கும் வாய்ப்பு ரொம்பவே குறைவு என்பதும் மிக முக்கிய காரணம்.
அதனால் தான் கடந்த இருபது வருடங்களுக்கு முன் தமிழன் என்கிற ஒரே ஒரு படத்தில் வழக்கறிஞராக நடித்த விஜய், அதன்பின் அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்யவில்லை. அவரது தந்தை இயக்கிய சுக்ரன் படத்தில் கூட கெஸ்ட் ரோலில் தான் லாயராக நடித்திருந்தார். இத்தனை வருட திரையுலக பயணத்தில் அஜித்தும் கூட 'நேர்கொண்ட பார்வை' என்கிற ஒரு படத்தில் தான் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
அதேபோல இத்தனை வருடங்களில் நடிகர் சூர்யாவும் தற்போது தான் ஜெய் பீம் என்கிற படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடித்திருக்கிறார். அதிலும் கூட இந்தப்படத்தில் அவர் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொண்ணூறுகளில் பக்கம் பக்கமாக வசனங்களை பேசி அதற்காகவே கைதட்டல் வாங்கிய விஜயகாந்த் கூட, ஒருசில படங்களில் மட்டுமே வழக்கறிஞராக நடித்திருந்தார் என்கிறபோது மற்றவர்கள் எல்லாம் எம்மாத்திரம்?




