'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் |

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஒரிரு நாளில் முடியவுள்ள நிலையில் மூன்றாம் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். அந்த ஆசை விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் விஜய் ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். தற்போது 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.