பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இமான் இசையமைக்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அண்ணாத்த படத்தின் மீதமுள்ள சில காட்சிகளை கோல்கட்டாவில் சென்று படமாக்க இருப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் கோல்கட்டா செல்வது தள்ளிப் போனதால் சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினர்.
இந்நிலையில் மீண்டும் படக்குழு கோல்கட்டா சென்று மீதமுள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங்கைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் டப்பிங் நடைபெற்று வருகிறதாம். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.