கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் |
நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி வரும் படம் "சிப்பாய்". இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார். இவர் சிம்புவின் "சிலம்பாட்டம்" படத்தை இயக்கியவர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நீண்டகால தயாரிப்பில் இப்படம் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்.
சிப்பாய் திரைப்படம் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது. விரைவில் இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இபடத்தை தயாரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.எஸ். தணிகைவேல், 17 சர்வதேச விருதுகள் பெற்ற "ஒற்றை பனை மரம்" படத்தை தயாரித்தவர். இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.