இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய யாஷிகாவும் உடன் பயணித்த 2 ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
நினைவு திரும்பியுள்ள யாஷிகா போலீசாரிடம் விபத்து குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மது அருந்தவில்லை என்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. யாஷிகா அதிவேகமாகக் காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும், அப்போது அவரது தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
யாஷிகாவுக்கு கை, கால் மற்றும் முகுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. பவனியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவுக்கு அவரது உயிர்த்தோழி பவனி இறந்தது பற்றி தகவல் தெரியாதாம். இன்னும் பவானி சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாராம் யாஷிகா.
இதுப்பற்றி யாஷிகாவின் அம்மா கூறுகையில், பவனி இறந்தது யாஷிகாவிற்கு தெரியாது. டாக்டர்கள் இப்போது எதையும் கூற வேண்டாம் என கூறி உள்ளனர். காரணம் இரத்தம் அழுத்தம் அதிகமாகி, அவருக்கு பிரச்னை ஏற்படும் என தெரிவித்துள்ளனர். அதனால் நாங்கள் அவரிடம் இந்த விஷயத்தை சொல்லவில்லை என கூறி உள்ளார்.
யாஷிகாவின் சகோதரி குறிப்பிடும்போது, “ரசிகர்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி. யாஷிகா ஐசியூவில் உள்ளார். கண் முழித்துவிட்டார். அவருக்கு எலும்பு முறிவு உள்ளதால் இன்னும் வரும் நாட்களில் அறுவை சிகிச்சைகள் உள்ளன.” என தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.