சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கவுதம்மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்திருக்கும் படம் நீ தானே என் பொன்வசந்தம். வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை தணிக்கை குழுவினர் பார்த்தனர். படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். "நாங்கள் பார்த்த படங்களிலேயே இதுபோன்ற ஒரு யதார்த்தமான காதல் படத்தை காணவில்லை" என்று இயக்குனர் கவுதம் மேனனை பாராட்டினார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜாவின் இசை எங்களை தாலாட்டியது என்றும் அவர்கள் தெரிவித்தனர். பொதுவாக எந்தப் படமாக இருந்தாலும் தணிக்கை குழுவினர் பாராட்டுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்தப் படத்தை உளப்பூ£ர்வமாக பாராட்டியதாக படத்தின் யூனிட் தெரிவித்தது.