விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக புதுச்சேரியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி மற்றும் சரத்குமார் இருவரும் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனை நேரில் சந்தித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை வரலட்சுமி வெளியிட்டுள்ளார்.
"அவர்கள் பெரிய குடும்பத்தில் இருந்து வந்த போதிலும், அவர்களின் பரந்த மனதும் அரவணைப்பும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நான் அவர்களின் அன்பால் மூழ்கிவிட்டேன். உங்களைச் சந்தித்து உங்களுடன் நேரம் செலவிட்டது மிகவும் இனிமையாக இருந்தது. கடவுள் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் உங்கள் குடும்பத்திற்கு பொழிவார்." என்று தெரிவித்துள்ளார்.
சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என்ற இரு முக்கியக் கதாபாத்திரங்களில் அவர் நடிக்கிறார். மேலும் கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகைகளும் பாண்டிச்சேரி வந்துள்ளனர். மணிரத்னம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் படம் அடுத்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா, அர்ஜுன் சிதம்பரம், விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, கிஷோர், ரகுமான் ஜெய ராம், லால், அஸ்வின் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.