'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
தெலுங்கு நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் வரப்போவதால் நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஷ்ணு மஞ்சு, நடிகை ஜீவிதா உள்ளிட்டோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தனர். இதனால் பிரச்சாரங்கள் சூடு பறந்த நிலையில் பிரகாஷ்ராஜ் ஒரு கன்னடர் என்கிற வாதம் முன் வைக்கப்பட்டதால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து பிரகாஷ்ராஜ்க்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. இந்த நிலையில், பிரகாஷ்ராஜூம்,விஷ்ணு மஞ்சும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்துக்கு என்னென்ன நலத்திட்டங்களை செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளை அளிப்பதில் போட்டா போட்டியிலும் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது திடீரென்று அமைதியாகி விட்ட நடிகர் பிரகாஷ்ராஜ், இனிமேல் நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் பிரச்சாரம் மட்டுமின்றி தேர்தல் வாக்குறுதி சம்பந்தமாகவும் பேசுவேன் என்று கூறி வருகிறாராம். அதன்காரணமாக மற்றவர்கள் தனக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளுக்கும் எந்தவித பதிலும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.