'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா தற்போது அகண்டா என்கிற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை போயப்பட்டி சீனு இயக்கி வருகிறார். கொரோனா இரண்டாவது அலை சற்று குறைந்துள்ள நிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோவில் நகரத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்டண்ட் சிவா மேற்பார்வையில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் ரகசியாமகவே வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.. காரணம் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்றே தனக்கு தெரியாது என பாலகிருஷ்ணா கூறியிருந்தார். இது உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தற்போது இங்கே தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடப்பது தெரிந்து விட்டால், ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்துக்கே வந்து கலாட்டா பண்ணுவார்கள் என்பதால் இந்த ரகசிய ஏற்பாடாம்.