டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

தொலைக்காட்சி பிரபலமான விக்னேஷ் கார்த்திக் இயக்கிய திட்டம் இரண்டு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த போட்டியின் போது தனது தந்தையின் நினைவுகள் குறித்து நெகிழ்வாக பேசியுள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பிரபலமடைந்த விக்னேஷ் கார்த்திக் வீஜே, நடிகர், இயக்குனர் என அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்தார். இவர் சமீபத்தில் பிரபல யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது தந்தை இழப்பு குறித்து நெகிழ்வாக பேசினார். அதில், என் வாழ்வில் பல துன்பங்களை சந்தித்திருக்கிறேன். காதல் தோல்விகளை கடந்து வந்திருக்கிறேன். ஆனால், அப்பாவின் இழப்பு பெரிதாக பாதித்தது. அப்பாவின் இழப்பு முன் காதல் தோல்வி எல்லாம் ஒன்றுமே இல்லை என கூறினார்.
விக்னேஷ் கார்த்திக், இயக்கிய திட்டம் இரண்டு திரைப்படம் வருகிற ஜுலை 30 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கிய திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில், அப்பா அதை பார்க்க முடியாமல் போனது குறித்து அவர் மிகவும் வருந்தினார்.