மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து ஒரே நாளில் ஓரளவிற்குப் பேசப்பட்டால் அதற்கு தொடர்பாகவோ, தொடர்பில்லாமலோ வெவ்வேறு விஷயங்களைச் சேர்த்து கருத்துக்களையும், கமெண்ட்டுகளையும் சொல்வார்கள். அப்படி ஒன்றாக பா.ரஞ்சித் 'சார்பட்டா பரம்பரை' படங்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் நடித்து இயக்கிய 'கபாலி, காலா' படங்களைப் பற்றியும் இப்போது வம்புக்கு இழுத்துள்ளார்கள் சில ரசிகர்கள்.
“அட்டகத்தி, மெட்ராஸ்' என இரண்டு படங்களையும் கதாநாயகர்களை நம்பாமல் தனது கதையையும், இயக்கத்தையும் நம்பியதால் அந்த இரண்டு படங்களுக்காகவும் பெரும் வரவேற்பை பெற்றார் ரஞ்சித்.
அதேசமயம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான ரஜினிகாந்தை வைத்து இயக்கிய 'கபாலி, காலா' ஆகிய படங்களில் ரஞ்சித் அதிகம் பேசப்படவில்லை. அந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளை வேண்டுமானால் லாபம் சம்பாதித்திருக்கலாம். ஆனால், 'அட்டகத்தி, மெட்ராஸ்' படங்கள் அளவிற்கு பேசப்படவில்லை. அந்தப் படங்களுக்குப் பிறகு இப்போது 'சார்பட்டா பரம்பரை' படம் மூலம் மீண்டும் ரஞ்சித் பேசப்படுகிறார்.
எனவே, இனி ரஞ்சித் ஹீரோக்கள் பின்னால் போகாமல் தன் படத்திற்காக, கதைக்காக ஹீரோக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்கிறார்கள்.




