'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர் (ரத்தம், ரணம், ரவுத்ரம்) பாகுபலிக்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத்தான் இதற்கும் கதை எழுதி உள்ளார். ஆர்ஆர்ஆர் கதை எப்படி உருவானது என்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
நானும் என் மகனும் (இயக்குனர் ராஜமவுலி) இணைந்து உருவாக்கிய கதைகள் எல்லாமே எங்கள் வீட்டில் இருக்கும் அலுவலகத்தில், உட்கார்ந்து இயல்பாகப் பேசி உருவாக்கியவை தான். ஆர் ஆர் ஆர் இதுவரை ரசிகர்கள் திரையில் பார்க்காத ஒரு கதை. ஆக்ஷனும், தேசபக்தியும் கலந்த உணர்ச்சிகரமான படமாக இது இருக்கும்.
இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிக்கிற மாதிரி ஒரு கதை வேண்டும் என்று மகன் சொன்னான். பிறகு அவனே வந்து அல்லூரி சீத்தாராம ராஜூ, கோமரம் பீம் என இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி படித்தேன். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றிய குறிப்பு இல்லை. இந்த இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும்? என்று கேள்வி கேட்டு கதைக்கான லீட் கொடுத்தான். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பமானாது.
படத்தின் இரண்டு நாயகர்களுக்கும், இயக்குநருக்கும் நல்ல நட்பு உள்ளது. எனவே அவர்கள் கச்சிதமாக இந்தப் படத்தில் பொருந்திவிட்டார்கள். எனவே வேறு யாரையும் நடிக்க வைக்க வேண்டும் என்று நாங்கள் யோசிக்கவேயில்லை. இந்தப் படத்தில் இயக்குநர் செய்திருக்கும் மாயமே, ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டும் என்பதுதான். இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் உலக அளவில் பேசப்படுவதாக இருக்கும் என்றார்.
படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.