பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
யாமிருக்க பயமேன் என்ற பேய் படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் டீகே. அதன் பிறகு காட்டேரி, கவலை வேண்டாம் படங்களை இயக்கினார். தற்போது இவர் இயக்கி முடித்துள்ள படம் கருங்காப்பியம். இதில் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ரைசா வில்சன் மற்றும் ஜனானி உள்பல பலர் நடிக்கிறார்கள். இதுவும் யாமிருக்க பயமே பாணியிலான திகில் படம். இதில் கொஞ்சம் பேண்டசி கலந்திருக்கிறது. காஜல் அகர்வால் இரண்டு வித கேரக்டரில் நடிக்கிறார். இதில் ஒரு கேரக்டர் 1940களுக்கு முன்பு வாழ்ந்த பண்ணையார் வீட்டு பெண்.
கிராம மக்களின் நலனுக்காக அவர் ஒரு விஷயம் செய்யப்போய் அது விபரீதத்தில் முடிகிறது. அதன் தொடர்ச்சியை அவர் இப்போதைய காலகட்டத்தில் தொடர்வாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து இயக்குனர் டீகே கூறியதாவது: இது புராணக்கதை அல்ல. அடிப்படையில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்ட ஒரு கதை. இந்த படத்தில் பார்வையாளர்கள் வித்தியாசமான காஜலைப் பார்க்க முடியும். அவருடைய தோற்றம் கூட மிகவும் வித்தியாசமானது, அந்தக் கால ஜமீன்தார்களின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து காஜலின் கேரக்டரை செதுக்கினோம். பொள்ளாச்சியில் படமாக்கப்பட்ட அவரது பகுதிக்கென்று ஒளிப்பதிவு, இசை எல்லாவற்றையும் வித்தியாசப்படுத்தி இருக்கிறோம். என்கிறார் இயக்குனர் டீகே.