‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? | ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் |
கடந்த சில மாதங்களாக அரசியலில் பரபரப்பாக இயக்கிக் கொண்டிருந்த உதயநிதி, தற்போது மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார். அரசியல் பணிகளால் தடைபட்டிருந்த மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் சார்பில் உதயநிதியே இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மெட்ராஸ் பட புகழ் கலையரசனும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்போது இவர்களுடன் பிக் பாஸ் புகழ் ஆரவும் இணைந்திருக்கிறார். உதய நிதி படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட படங்களை ஆரவ் தனது சமூக வலைத்தள பக்கக்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவ் பெரிய அளவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நடித்து வெளிவந்த மார்க்கெட் ராஜா படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் நடித்து முடித்துள்ள ராஜபீமா படமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தான் அவர் உதயநிதியுடன் நடிக்கிறார்.