சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு |
மலையாள நடிகர் மம்முட்டியை பொறுத்தவரை தனக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களின் திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்வுகளில் பெரும்பாலும் தவறாமல் கலந்து கொள்வார். அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்ற தில்ஷாத் மற்றும் சாரா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மம்முட்டி.
மணப்பெண் வீட்டினர் சார்பாக கலந்து கொண்ட மம்முட்டி, அப்போதுதான் முதன்முறையாக மணமகனை நேரில் பார்த்தவர், அவரது உயரத்தை கண்டு அசந்து போனார். மணமகனை அவர் ஆச்சர்யத்துடன் அண்ணாந்து பார்க்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தற்போது வைரலாகி உள்ளது.