ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ, சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்னர் காரைக்குடி, மதுரையில் நடைபெற்றது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்த நிலையில், ஜூலை 13 முதல் மீண்டும் சூர்யா 40 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த தகவலை அப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார். அதோடு, நீண்ட இடைவேளைக்குப்பிறகு கேமராவை பிடிப்பது சிறந்த உணர்வாக உள்ளது. இது நீண்ட ஷெட்யூல்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் அப்டேட்
இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் அப்டேட்டும் வெளியாகி உள்ளது. அதாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை(ஜூலை 16) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.