சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ததால், பட வாய்ப்புகளை இழந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நடிகர் வடிவேல், நாளை வைகோ முன்னிலையில், ம.தி.மு.க.,வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரைப்பட உலகில் தனக்கென்று ஒருபாணியை வகுத்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த, 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதிலும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்தை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியதால், அவருடைய பேச்சுக்கும், பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. அந்த தேர்தலில், தி.மு.க., தோல்வியை தழுவியது. அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது. தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்த ஒரே காரணத்தால், பட வாய்ப்புகள் அறவேயின்றி, சினிமா துறையிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, வடிவேலு தள்ளப்பட்டார். இதற்கிடையே, எதிர் எதிர் துருவமாக இருந்த தி.மு.க., - தே.மு.தி.க., ஒரே அணியில் வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், வடிவேலுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் வடிவேலு, நாளை ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில், அக்கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை திருச்சியில், "நாடாளுமன்றத்தில் வைகோ என்ற நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில், ம.தி.மு.க.,வுக்கோ, வைகோவுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லாத நடிகர் வடிவேலு பங்கேற்கிறார் என்று அழைப்பிதழில் பெயர் போடப்பட்டுள்ளது. ஆகையால் அவர், ம.தி.மு.க.,வில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதை, அக்கட்சி சார்பில் யாரும் உறுதி செய்ய மறுத்து வருகின்றனர்.