ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்தவர் சிலம்பரசன். சினிமாவைப் பற்றிய அவரது திறமைக்கு இந்நேரம் எங்கேயோ உயர்ந்திருக்க வேண்டியர் என்று திரையுலகத்திலேயே சொல்வார்கள்.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புக்கே, ஏன் அவரது அப்பா தயாரித்த படப்பிடிப்புக்கே காலையில் படப்பிடிப்பு என்றால் மாலையில் கூட வரமாட்டார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராதவர் என்று பெயரெடுத்தவர்.
கடந்த சில வருடங்களாக சிலம்பரசனிடம் பல மாற்றங்கள். மணிரத்னம் இயக்கத்தில் வந்த செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கும் போது சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். சிம்புவா இது என அப்போதே திரையுலகத்தினர் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்து கடந்த வருடம் வெளிவந்த ஈஸ்வரன் படத்திலும் குறுகிய காலத்தில் அப்படத்தை நடித்துக் கொடுத்தார்.
இப்போது மாநாடு படத்தை படக்குழுவினரே ஆச்சரியப்படும் அளவிற்கு சரியான நேரத்திற்கு வந்து முடித்துக் கொடுத்துள்ளார். “85 நாட்கள் திட்டமிட்ட படப்பிடிப்பு 68 நாட்களில் முடிந்துவிட்டது. அதற்குக் காரணம் சிலம்பரசன் கொடுத்த ஆதரவு,” என படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன் பாராட்டியுள்ளார். படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் சிலம்பரசனைப் பற்றி ஒரு நாள் கூட குறை சொல்லவில்லை என்பதும் ஆச்சரியம், ஆனால், உண்மை.
மாநாடு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.