தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது முன்னணியில் உள்ள நடிகை பூஜா ஹெக்டே. ஒரு படத்திற்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் கேட்பதாகத் தகவல்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மகேஷ் பாபு ஜோடியாக ஒரு படம், பவன் கல்யாண் ஜோடியாக ஒரு படம் என தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் என்று தகவல். அவற்றோடு தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்திலும் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று சொல்கிறார்கள். தெலுங்கில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்திற்காகத்தான் பூஜாவிடம் பேசி வருகிறார்களாம்.
இதற்கு முன்பு 'மாஸ்டர்' படத்தில் நடித்த மாளவிகா மோகனனை தனது தனுஷ் 43வது படத்திற்காக ஜோடியாக்கினார் தனுஷ். அடுத்து 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டேவை தனது புதிய படத்திற்காக ஜோடியாக்க உள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தனுஷ் மிகவும் பிஸி என்கிறார்கள் கோலிவுட்டில். அந்தப் படங்களை முடித்த பிறகு மீண்டும் இயக்குனராக ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் தனுஷுக்கு உள்ளதாம்.




