‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து 2018ம் ஆண்டு வெளிவந்த படம் 'மாரி 2'. அப்படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் யு-டியுபில் 2019 ஜனவரி 2ம் தேதி வெளியானது.
வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வந்த அப்பாடல் தற்போது மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. யு-டியூபில் 5 மில்லியன் லைக்குகளை தற்போது பெற்றுள்ளது.
தென்னிந்திய அளவில் வெளியான திரைப்படப் பாடல்களில் யு-டியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற ஒரே பாடல் இதுதான். தற்போது 1186 மில்லியன் பார்வைகளுடன் உள்ள இப்பாடல் விரைவில் 1200 மில்லியன் சாதனையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அளவில் ஏற்கெனவே பல திரைப்படப் பாடல்கள் 5 மில்லியன் லைக்ஸ் சாதனையைப் படைத்துள்ளன. ஆனால், தென்னிந்தியத் திரைப்படப் பாடல் ஒன்று 5 மில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதல் முறை.
'ரவுடி பேபி' பாடல் சாதனையை முறியடிக்கும் விதத்தில் யார் சூப்பர் ஹிட் பாடலை எதிர்காலத்தில் கொடுக்கப் போகிறார்களோ தெரியாது ?.