''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
இந்திய சினிமா என்றாலே அது பாலிவுட் தான் என உலக அளவில் ஒரு பெயர் இருக்கிறது. ஆனால், பாலிவுட்டை விட சிறந்த படங்கள் தென்னிந்திய அளவில் உருவாகி வருகிறது. இருப்பினும் தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு பாலிவுட் என்பது அவர்களது பெரும் கனவாகவே இருக்கிறது.
அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஹிந்தியில் நடிக்கப் போனால் தான் சம்பளம் மிக அதிகமாகக் கிடைக்கும். சமீப காலமாக தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள் ஹிந்திப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தானா ஹிந்திப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததும் பாலிவுட்டில் ஒரு வீட்டை வாங்கினார். பூஜா ஹெக்டேவுக்கும் மும்பையில் வீடு உள்ளது. தற்போது நடிகர் ராம் சரண் ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
அந்த வரிசையில் அடுத்ததாக சமந்தாவும் பாலிவுட்டில் வீட்டை தேடிக் கொண்டிருக்கிறாராம். 'த பேமிலி மேன் 2' வெப் தொடரில் நடித்த பிறகு அவருக்கு பல பாலிவுட் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். எனவே, மும்பையில் தங்கியிருந்தால் அந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம்.
பாலிவுட்டில் எப்போதுமே தென்னிந்திய நடிகர்கள், நடிகைகளுக்கு அவ்வளவாக முக்கியத்தும் தர மாட்டார்கள். விதி விலக்காக நடிகைகளை மட்டும் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்பார்கள். இங்கிருந்து செல்பவர்களில் யாருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பது எதிர்காலத்தில் தெரிய வரும்.