துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
பெரும் வெற்றி பெற்ற கே.ஜி.எப் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகிறது. படத்தை வாங்க ஓடிடி தளங்கள் இடையே கடும் போட்டி நிலவும் நேரத்தில் படத்தின் இசை உரிமம் 7 கோடியே 20 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளின் இசை உரிமையை லஹரி மற்றும் டி-சீரிஸ் நிறுவனம் இணைந்து வாங்கி உள்ளது.
படம் கட்டாயம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று ஏற்கெனவே தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியாகலாம் என்று தெரிகிறது.