ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |

பாலா இயக்கிய அவன் இவன் படத்திற்கு பிறகு விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கிய இப்படம் ஆக்சன், திரில்லர் கதையில் உருவாகிறது. இந்தபடத்தின் ஒரு பாடல் காட்சியும், சில பேட்ஜ் ஒர்க்கும் பேலன்ஸ் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது தனது 31ஆவது படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் விஷால். இந்த மாதம் முழுக்க படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தநேரத்தில் வருகிற 9-ந் தேதி முதல் எனிமி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் 8 நாட்களுக்கு அதே ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி ஆகியோரும் கலந்து கொள்கிறார்களாம். அதற்காக இப்போதே ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறாராம் எனிமி டைரக்டர் ஆனந்த் சங்கர்.




