இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, வெற்றி பெற்ற படம் ‛கைதி'. இப்படம் வெளியாகி இரண்டாடுகள் ஆக போகிறது. இந்நிலையில் ‛‛இது தனது கதை, இதை திருடி தான் கைதி உருவாகி உள்ளது, எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என கேரளா மாநிலம் கொல்லம் கோர்ட்டில் ராஜீவ் ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‛கைதி' படத்தை பிற மொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட அறிக்கை : ‛‛எங்களது கைதி படத்தை ரீ-மேக் செய்யவும், இரண்டாம் பாகம் உருவாக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதேசமயம் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல் இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.