அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழ், தெலுங்கு படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்தவர் தற்போது மீண்டும் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும், ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரிக்கும் போனி கபூர், தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்யவும் முயற்சி செய்து வருகிறார். அந்தவகையில், இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'கோமாளி' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றி உள்ளார். இதில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுன் கபூர், தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.