'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் |
நடிகர் அர்ஜுனை பொறுத்தவரை கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், கடந்த சில வருடங்களாக வில்லன், குணசித்திர நடிகர், இரண்டாவது ஹீரோ என புதிய பரிமாணத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி வருகிறார். பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதற்கு தயங்காதவர் அர்ஜுன். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், கமல் வரிசையில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார் அர்ஜூன்.
விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவிருக்கும் சர்வைவர் என்கிற சாகச நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்க இருக்கிறார் அர்ஜுன். இதற்கான படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் துவங்குகிறது. இந்த படப்பிடிப்புக்காக அல்லது இதன் புரோமோ படப்பிடிப்புக்காக அர்ஜுன் தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க போவதாக செய்திகள் வந்தன.