'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
'அண்ணாத்த படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கமான தனது உடல்நல பரிசோதனைக்காக கடந்த 19ந்தேதி அமெரிக்கா சென்றார். ரஜினி அமெரிக்காவில் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி தகவல்களும், படங்களும் வெளியாகி உள்ளன. சிகிச்சைக்கு இடையே உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகள் மட்டுமல்லாமல் தனது பழைய நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று ஆச்சர்யமளித்து வருவதால் மிகுந்த புத்துணர்ச்சியோடு நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் இருக்கும் ஒரு புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. தற்போது மேலும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது
உடல்நிலை பரிசோதனைகளில் ரஜினி முழு உடல்நலத்துடன் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடல்நல பரிசோதனை தேவையில்லை என்றும் கூறியிருப்பதால் ரஜினி குடும்பத்தினர் உற்சாகமாக உள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியே ரஜினியின் உற்சாகத்துக்கு காரணம் என்கிறார்கள். ரஜினி அமெரிக்காவில் இருந்து ஜூலை இரண்டாவது வாரம் சென்னை திரும்புகிறார். அமெரிக்காவில் உள்ள அவரின் இரண்டு நண்பர்கள் தான் ரஜினி தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள். ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தங்கி இருக்கிறார்.