''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் அப்டேட்களில் ஒன்றாக படக்குழுவினர் நேற்று ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஒன்றாக பைக்கில் செல்லும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.
அந்த புகைப்படத்தில் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. சுதந்திர காலத்து கதை என்பதால் அப்போதெல்லாம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை. இருந்தாலும் சைபராபாத் டிராபிக் போலீஸ் அவர்களது டுவிட்டர் கணக்கில் 'ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரது தலைகளில் ஹெல்மெட்டை போட்டோஷாப் மூலம் செட் செய்து, “இப்போதுதான் பெர்பெக்டாக உள்ளது, ஹெல்மெட் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள்,” என அவர்கள் உருவாக்கிய போஸ்டரை வெளியிட்டது.
ஆனாலும், அந்த போஸ்டரில் உற்ற மற்றொரு குறையை சுட்டிக் காட்டும் வகையில் ஆர்ஆர்ஆர் குழுவினர், “இப்போதும் பர்பெக்ட் இல்லை, நம்பர் பிளேட் இல்லை,” என்பதை சுட்டிக் காட்டியிருந்தார்கள். சுவாரசியத்துக்காக செய்யப்பட்ட ஒன்று தான் என்றாலும் இந்த விழிப்புணர்வு டுவீட்டுகள் பலரைச் சென்றடைந்திருக்கிறது.