நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் இணைந்து பணிபுரிந்த 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி வெளிநாட்டுப் பயணம், இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் என இந்த காதல் ஜோடி 90ஸ் கிட்ஸ்களை நிறையவே வெறுப்பேற்றியது.
நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பதால்தான் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு விக்னேஷ் சிவன், “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இப்போதுதான் கடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை அடுத்து வரப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் எந்த அலை முடிந்ததும் திருமணம் வைத்துக் கொள்ளப்போகிறார் விக்னேஷ் சிவன்?.