மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா |
கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரளா முழுக்க எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இந்த நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ஆராட்டு படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு "வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.