'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மகதீரா, பாகுபலி என பிரமாண்ட வரலாற்று படங்களை இயக்கும் இயக்குனராக அறியப்படும் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2006ல் இயக்கிய கமர்ஷியல் ஆக்சன் படம் தான் விக்ரமார்குடு. ரவிதேஜா கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் அனுஷ்கா கதாநாகியாக நடித்திருந்தார். போலீஸ் ஆக்சன் படமாக உருவாக்கி இருந்த இந்தப்படம் ரவிதேஜாவை வசூல் ராஜாவாக மாற்றியதுடன், அதுவரை பெரிய அளவில் கவனம் பெறாமல் இருந்த அனுஷ்காவிற்கு முதல் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்தப்படம் பின்னாளில் கார்த்தி நடிப்பில் சிறுத்தை என தமிழில் ரீமேக்காகி இங்கேயும் வெற்றி பெற்றது.
இன்று இந்தப்படம் வெளியாகி 15ஆம் ஆண்டுகளை தொட்டுள்ள நிலையில் இந்தப்படம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா. ‛கூ' என்கிற புதிய சோஷியல் மீடியா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள அனுஷ்கா, அதில் விக்ரமார்குடு படத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். எனக்கு இந்தப்படம் தான் முதல் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார்.