பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வேண்டாத கோயில் இல்லை. வேண்டாத தலைவர்கள் இல்லை. வருடக்கணக்கில் அவர்கள் கையில் பேனரை ஏந்தியபடி வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக்கொண்டு திரிகிறார்கள்.
இந்நிலையில் தான், அவர்களின் கோரிக்கை உச்சத்திற்கு சென்றதை அடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டதால் அப்டேட் வெளியாகவில்லை. இந்த நிலையில், நேற்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 65ஆவது படம் குறித்த பர்ஸ்ட்லுக், டைட்டீல் வெளியிடப்பட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் நொந்து போனார்கள.
இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது அப்படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், ‛‛வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட பாடல் உள்ளது. அதேபோல் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.