ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. சில சின்னத்திரை தொடர் படப்பிடிப்புகள் மட்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. இந்த நிலையில் 100 பேர்களுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இது நேற்று முதல் அமுலுக்கு வந்தது.
ஆனாலும் படப்பிடிப்புகள் எதுவும் நேற்று தொடங்கவில்லை. படப்பிடிப்புக்கு முந்தைய, பிந்தைய பணிகள் அதற்குரிய ஸ்டூடியோக்களில் ஊரடங்கு காலத்திலும் சிறிய அளவில் நடந்து கொண்டுதான் இருந்தது. நேற்று மூழு வீச்சுடன் தொடங்கியது.
தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் படப்பிடிப்பை நடத்த தயாரிப்பாளர்கள் தயங்குவதாக தெரிகிறது. படப்பிடிப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதோடு முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்த படப்பிடிப்பும் நேற்று தொடங்கவில்லை.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருப்பதாவது: படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தயார் நிலையில் இல்லாத காரணத்தால் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் தொடங்கவில்லை, இன்னும் ஒரு சில நாளில் படப்பிடிப்புகள் தொடங்கும். சின்னத்திரை தொடர்கள் தங்கள் படப்பிடிப்பை தொடங்கி உள்ளன. என்றார்.