மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் அறிவிப்பும், முதல் பார்வையும் இன்று மாலை வெளியாக உள்ளது. அது மட்டுமல்ல, விஜய்யின் 66வது பட அறிவிப்பும் கூட நாளை வரப்போகிறது என்கிறார்கள்.
ஆனால், அஜித் நடித்து வரும் 'வலிமை' அப்டேட்டை மட்டும் அப்படக்குழுவினர் தர மிகவும் தாமம் செய்து வருகிறார்கள் என்ற வருத்தம் அஜித் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பல இடங்களில் 'வலிமை அப்டேட்' கேட்ட அஜித் ரசிகர்கள் தற்போது நடந்து வரும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கூட ஒரு பேனர் பிடித்து அப்டேட் கேட்டார்கள். திமுக., எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா கூட சமூகவலைதளத்தில் இதுக்கு மேல யாரும் பொறுமையா இருக்க முடியாது. வலிமை அப்டேட் எப்பதான் வரும் என கேட்டுள்ளார்.
அஜித் பிறந்தநாளன்று வெளியாக இருந்த அப்டேட்டை கொரானோ காலம் என்பதால் தள்ளி வைத்தார்கள். தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் இனியும் தாமதிக்காமல் கொடுப்பதுதான் படக்குழுவினருக்கு சிறப்பு.
'வலிமை அப்டேட்' வேண்டும் என ஏதாவது போராட்டம் ஆரம்பிப்பதற்குள் கொடுத்து விடுங்கள்.