ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தெலுங்கில் தற்போது ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் சிரஞ்சீவி இன்னும் சில காட்சிகளில் நடித்தால் அவரது வேலை முடிந்துவிடும். இதையடுத்து அவர் நடிப்பதற்காக இரண்டு ரீமேக் படங்கள் காத்திருகின்றன. ஒன்று மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர்.. இன்னொன்று அஜித் நடித்த வேதாளம். லூசிபர் ரீமேக்கை மோகன்ராஜா இயக்க, வேதாளம் ரீமேக்கை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபாஸை வைத்து பில்லா படத்தை ரீமேக் செய்து இயக்கியவர்.
வேதாளம் படத்தின் கதை கோல்கட்டா நகர பின்னணியில் நடைபெறுவதால், படத்தின் முக்கியமான, அதேசமயம் சிரஞ்சீவி இடம்பெறாத மாண்டேஜ் காட்சிகளை கடந்த வருடம் நடைபெற்ற தசரா பண்டிகையின் போதே படமாக்கி விட்டாராம் மெஹர் ரமேஷ். இந்த மாண்டேஜ் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் முப்பது லட்சம் செலவு செய்துள்ளாராம் மெஹர் ரமேஷ். இதனால் லூசிபர் ரீமேக்கைவிட, வேதாளம் ரீமேக்கிற்கு தான் சிரஞ்சீவி முதல் சிக்னல் தருவார் என்றே தெரிகிறது.