10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'மாஸ்டர்'. இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் வாங்கியுள்ளார். படத்தைப் பார்த்த சல்மான் கான் படத்தில் உள்ள 'மாஸ்டர்' கதாபாத்திரத்தை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, 'மாஸ்டர் கதை'யை முற்றிலுமாக மாற்றச் சொல்லிவிட்டாராம்.
'மதுப்பிரியர் மாஸ்டர்' கதாபாத்திரம்தான் சல்மான் கானை வெகுவாகக் கவர்ந்துவிட்டதாம். இதுவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. எனவே, அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே அவர் அதிகம் விருப்பப்பட்டாராம். அதன் காரணமாகத்தான் அவர் படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கியிருக்கிறார் என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனிமேல், தென்னிந்தியப் படங்களின் ரீமேக்கில் நடிக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சல்மான் கான் முடிவு செய்துள்ளாராம். அதன் விளைவுதான் இந்த மாற்றம் என்கிறார்கள்.




