''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கொரோனா இரண்டாவது அலை பரவிக் கொண்டிருந்தபோதும் ரஜினியின் அண்ணாத்த படத்தை ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பாதுகாப்பான முறையில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கினர். அந்த படத்தில் தனக்கான காட்சிகளில நடித்து முடித்து விட்டே சென்னை திரும்பினார் ரஜினி.
அதையடுத்து ஆந்திராவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்ததால் சிரஞ்சீவி, ராஜ மவுலி, மகேஷ்பாபு, பிரபாஸ் என பலரது படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் அங்கு துவங்கி உள்ளன. தமிழகத்தில் படப்பிடிப்பு துவங்கு இன்னும் அனுமதி கிடைக்காததால் இங்குள்ள பல நடிகர்கள் ஐதராபாத்தில் படமாக்க முடிவு செய்துள்ளனர். தற்போது விஷாலின் 31வது படத்தின் படப்பிடிப்பு அங்குள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
இதையடுத்து சூர்யா, கார்த்தி போன்ற தமிழ் நடிகர்களின் புதிய படங்களின் படப்பிடிப்புகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சில ஹிந்தி, கன்னட படங்களின் படப்பிடிப்புகளும் கூட இந்த பிலிம் சிட்டியில் விரைவில் நடைபெற உள்ளதாம். ஆக, ராமோஜிராவ் பிலிம்சிட்டி ஹாட் சிட்டியாக மாறிக் கொண்டிருக்கிறது.