'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
பிரபல யூ டியூப்பர் கிஷோர் கே.சாமி. தனது யூ டியூப் சேனல் மூலம் அரசியில் விமர்சனம் செய்து வந்தார். அவ்வப்போது சினிமா குறித்தும், சினிமா நட்சத்திரங்கள் குறித்தும் விமர்சனம் செய்வார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க தலைவர்களை கிஷோர் கே.சாமி அவதூறாக பேசியதாகவும், பெண் பத்திரிகையாளர்களை ஆபாசமாக விமர்சித்தாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கிஷோர் மீது நடிகை ரோகிணியும் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மூலமாக நேற்று போலீஸ் கமிஷனருக்கு தனது புகார் மனுவை அனுப்பி உள்ளார். அந்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு கிஷோர் கே.சாமி என்னை பற்றியும் எனது கணவர் ரகுவரன் பற்றியும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த மனு கீழ்பாக்கம் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.