தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகை ஹன்சிகாவின் 50வது படம் மஹா. இதில் சிம்பு கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார். மதியழகன் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் மதியழகன் முயற்சி செய்தார்.
இதற்கிடையில் தனக்கு தெரியாமல் படத்தின் காட்சிகளை மாற்றி அமைத்தும், எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தராமலும் படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முயற்சிகள் நடப்பதாகவும், படத்தை வெளியிட தடை கோரியும் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், படத்தின் உருவாக்கம், தலைப்பு உள்ளிட்ட எதிலும் இயக்குனருக்கு எந்த உரிமையும் இல்லை என ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதோடு படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக இயக்குனர் யு.ஆர்.ஜமீலுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 5 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கவும் தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது.