லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் ஏப்ரல் மாதம் 26ம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்களை மூடி 50 நாட்களுக்கும் மேலாகின்றன. கடந்த வருடம் கொரோனா முதல் அலை வந்த போது மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் 10ம் தேதி தான் திறக்கப்பட்டது. சுமார் 8 மாத காலங்கள் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்பட்ட தியேட்டர்கள், பிப்ரவரி மாதம் முதல் தான் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
முதல் அலையின் பாதிப்புக்கும் இரண்டாவது அலையின் பாதிப்புக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முதல் அலையின் போது 8 மாதங்களுக்குப் பிறகுதான் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகம் என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த முறை ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் அது இன்னும் அதிகமாகலாம்.
இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் ஜுலை மாதம் முதல் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில முக்கிய படங்களை ஜுலை கடைசியில் வெளியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அது போல தமிழ்நாட்டிலும் அனுமதி கிடைக்குமா என்று இங்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எப்படியும் 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி கொடுப்பார்கள். அதை ஜுலை மாதத்தில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்பது தியேட்டர்காரர்களின் எண்ணமாக உள்ளது.
'டாஸ்மாக்' கடைகளைத் திறந்த பின்பு தங்களது கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியது.
ஆனால், திரையுலகத்தில் இன்னும் யாருமே தியேட்டர்களைத் திறக்க அனுமதியுங்கள் என்று எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. புதிய அரசாங்கம் என்பதால் பொறுப்பிலிருப்பவர்களை அணுக திரையுலகத்தினர் தயங்கி வருவதாகத் தெரிகிறது என்றும் ஒரு பேச்சு உள்ளது.