Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

26வது ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த 'பெத்தராயுடு'

15 ஜூன், 2021 - 13:09 IST
எழுத்தின் அளவு:
26-years-of-Pedarayudu

தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிற்பி இசையமைப்பில் சரத்குமார், மீனா, குஷ்பு, விஜயகுமார், கவுடண்மணி, செந்தில், மனோரமா மற்றும் பலர் நடிக்க 1994ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'நாட்டாமை'.

இப்படத்தை தெலுங்கில் 'பெத்த ராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்து 1995ம் ஆண்டு வெளியிட்டு அங்கும் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். தெலுங்கு ரீமேக்கை ரவி ராஜா பினி செட்டி இயக்க, மோகன் பாபு, சௌந்தர்யா, பானுப்ரியா ஆகியோருடன் ரஜினிகாந்தும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

தமிழில் விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தைத்தான் தெலுங்கில் ஏற்று நடித்தார் ரஜினிகாந்த். மோகன் பாபுவும், ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள், மோகன் பாபு கேட்டுக் கொண்டதால் அவருக்காக அக்கதாபாத்திரத்தில் நடித்தார் ரஜினி. ரஜினியின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அப்படம் வெளிவந்து இன்றுடன் 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. படத்தை இயக்கிய ரவி ராஜா பினிசெட்டியின் மகன் நடிகர் ஆதி, அப்படம் பற்றி நினைவுகூர்ந்து, “ஆல் டைம் பிளாக் பஸ்டர் 'பெத்தராயுடு' படத்தின் 26வது வருடக் கொண்டாட்டம். எனது அப்பா இயக்கிய படங்களில் எனக்குப் பிடித்த ஒன்று, தனித்துவமான மோகன்பாபு சார், சிறப்புத் தோற்றத்தில் தலைவர் ரஜினிகாந்த் ஆகியோருடன்....இதன் மகத்துவம் மீள முடியாத ஒன்று...,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் டிவி தொகுப்பாளர் ஆகும் தமன்னாதெலுங்கில் டிவி தொகுப்பாளர் ஆகும் ... விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் கொரோனா நிதி விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் கொரோனா நிதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15 ஜூன், 2021 - 20:57 Report Abuse
Mirthika Sathiamoorthi சிலசமயம் எனக்குள் பலகேள்விகள் வரும். அதில் ஓன்று விஜயகுமார் ரஜினிகாந்த்.. விஜயகுமார் கதநாயகனாக நடிக்க ரஜினி வில்லனாக நடித்ததும் உண்டு..ரஜினி முன்னே போக ஏன் விஜயகுமாரால் தொடர்ந்து நாயகனாக ஜெயிக்கமுடியவில்லை எனும் கேள்வி..பெத்ராயிடு படம் பதில்...விஜயகுமார் ரஜினி ஒரே கதாபாத்திரம் இரு வேறுபட்ட நடிப்பு..ரஜினியின் நடிப்பு மாஸ் காட்டியிருக்கும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in