கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
நடிகர் சூர்யா குடும்பத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்திருந்தனர். இவர்களது ரசிகர்கள் பலர் கொரோனா காலக்கட்டத்தில் பல உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். இதேபோல் கார்த்தியும் தன்னுடைய மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 வழங்கியுள்ளார். நிதி உதவி சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இவர்களின் இந்த இன்ப அதிர்ச்சியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.