ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் அவருடைய 65வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ஐந்தாறு திரைப்படங்கள் இங்குள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரித்த படங்கள் தான்.
மற்ற மொழிகளிலிருந்து வரும் தயாரிப்பாளர்களுக்கு தனது படங்களைத் தயாரிக்க அவர் அதிகம் வாய்ப்பு கொடுத்ததில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடைய 66வது படத்தைத் தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கப் போவதாகவும், தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கப் போவதாகவும் உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
தெலுங்குத் தயாரிப்பாளர் ஒருவருக்கு விஜய் படம் நடித்துக் கொடுக்க இருப்பது அவரை வைத்து இங்கு படம் தயாரிக்க ஆசைப்படும் சிலரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கு தற்போதுள்ள வியாபாரத்தை வைத்து அவர் நடிக்கும் படத்தைத் தயாரிக்க வேண்டும் என சிலர் முயன்று வருகிறார்கள், அவர்களுக்குள் போட்டியும் நிலவி வருகிறது. எப்படியும் அவரைத் தங்கள் தயாரிப்பில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்று இருந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
மற்ற மொழிகளில் அவர்களுடைய தயாரிப்பாளர்களுக்குத்தான் முன்னணி ஹீரோக்கள் வாய்ப்பு தருகிறார்கள். இங்கிருந்து போகும் தயாரிப்பாளர்கள் அங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் படத்தைத் தயாரிக்க முடியாது. அப்படியிருக்க இவ்வளவு வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் ஏன் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
வேறு மொழிப் படங்களில் நடிக்ககூடாது என்ற கொள்கையுடன் இருந்த விஜய், தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளாராம். “பிகில், மாஸ்டர்” தெலுங்கில் டப்பிங் ஆகி நல்ல வரவேற்பைப் பெறவே நேரடித் தெலுங்கில் நடித்துவிடலாம் என நினைக்கிறாராம். விஜய்யின் 66வது படம் அவரது முதல் நேரடித் தெலுங்குப் படமாகவும் அமையப் போகிறது.
அதே சமயம், மற்ற மாநிலங்களிலும் தமிழ்ப் படங்கள் வசூலைக் குவிக்கும் போது அங்குள்ளவர்கள் இங்கு வந்து படங்களைத் தயாரிப்பதும் தவறில்லை என ஒரு சாரார் சொல்கிறார்கள்.