அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். அதோடு, தி பேமிலிமேன் 2 வெப்சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛செகண்ட் இன்னிங்சில் வலுவான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். முக்கியமாக தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் நாரப்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் எப்போதுமே வெங்கடேசுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவேன். இவருடன் நடிப்பதற்கு முன்பு மூன்று முறை வாய்ப்பு வந்தபோது கால்சீட் பிரச்சினையால் நடிக்க முடியாமல் போனது. அதன்காரணமாகவே நாரப்பா பட வாய்ப்பு வந்தபோது பல படங்கள் கைவசம் இருந்தபோதும் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்களை வாங்கி இந்த படத்திற்கு கொடுத்து நடித்தேன். வெங்கடேஷ் படம் என்பதால் மட்டுமே இந்த ரிஸ்க்கை எடுத்தேன்'' என தெரிவித்துள்ளார்.