பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து |

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன. பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்காக சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியதாகச் சொன்னார்கள். மே 10ம் தேதிக்குப் பிறகே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதனிடையே, தெலங்கானாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கான தளர்வுகளை ஜுன் 10ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக அறிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் இந்த மாதக் கடைசியில் இருந்து விடுபட்ட தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் தமிழ் சினிமாவிலிருந்தும் பலர் அங்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.




