முதன்முதலாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் மகேஷ்பாபு
ஜூன் 02, 2021
Advertisement
தற்போது ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது கொரோனா தொற்று பரவி வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி வெளியிட இருந்த ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து ராஜ மவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான கதை எழுதும் பணியை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டாராம். தற்போது சர்காரு வாரிபாட்டா என்ற படத்தில் நடித்து வரும் மகேஷ்பாபு, இதையடுத்து திரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ராஜமவுலியுடன் இணைகிறார். இந்த படம் தான் ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் இணையும் முதல் படமாகும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!