'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் ஜுன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தனுஷ் நடித்த 'அசுரன்' படத்திற்குப் பிறகு 'ஜகமே தந்திரம்' படத்தை தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கார்த்திக் சுப்பராஜுடன் தனுஷ் இணையும் முதல் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்ததே காரணம். கடந்த வருடம் மே மாதம் 1ம் தேதி இப்படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது படத்தை வெளியிட முடியவில்லை.
தியேட்டர்கள் திறந்ததும் படம் எப்படியும் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றமான ஒரு அறிவிப்பு வந்தது. படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்தார்கள். படத்தைத் தியேட்டர்களில் தான் வெளியிட வேண்டும் என்று தனுஷும் பேசிப் பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் அவருடைய முடிவிலிருந்து மாறவில்லை.
இதனிடையே, 'மாஸ்டர்' படம் தியேட்டர்களில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்த போது தனுஷ் டுவிட்டரில், “விஜய் சாரின் 'மாஸ்டர்' ஜனவரி 13ம் தேதி வெளியாகிறது. நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் தியேட்டர்களில் படம் பார்க்கும் சினிமா காதலர்களுக்கு மீண்டும் அந்த கலாச்சாரத்தை வளர்க்க உதவும். தியேட்டர் அனுபவத்தைப் போல வேறு எதுவுமில்லை, அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தியேட்டர்களில் படத்தைப் பாருங்கள்,” என குறிப்பிட்டிருந்தார்.
அதன் மூலம் 'ஜகமே தந்திரம்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது பற்றிய தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார் எனச் சொன்னார்கள். அதோடு, படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷை பாலோ செய்வதிலிருந்து விலகியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக தனுஷ் ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டார்கள். அதன்பின் 'ஜகமே தந்திரம்' படம் பற்றி தன் டுவிட்டரில் தனுஷ் எதையும் பதிவிட்டதே இல்லை.
இந்நிலையில் இன்று ஜகமே தந்திரம் டிரைலர் வெளியானதும், அது குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார் தனுஷ். “தியேட்டர்களில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் நெட்பிளிக்ஸில் வருகிறது. இருந்தாலும் கூட நீங்கள் அனைவரும் 'ஜகமே தந்திரம்' படத்தையும் 'சுருளி'யையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்,” எனத் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டீசர் வெளியான போது அதில் தனுஷ் பெயர் மற்றும் டெக்னீஷியன்கள் பெயர் இடம் பெறவில்லை. ஆனால், இப்போது டிரைலரில் அவற்றைச் சேர்த்திருக்கிறார்கள்.