மீண்டும் தமிழுக்கு வருகிறார் பாவனா | பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் |
மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதவன். அதன் பிறகு பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவருடைய நடிப்பை ரசித்தவர்கள் அதிகம். தமிழில் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை தக்க வைத்திருநதவர் ஹிந்தியிலும் நடிக்க விருப்பப்பட்டதால் தமிழைத் தவிர்த்தார்.
2012ம் ஆண்டில் வெளிவந்த 'வேட்டை' படத்திற்குப் பிறகு நான்கு வருடம் கழித்துத்தான் 'இறுதிச் சுற்று' படத்தில் நடித்தார். அதற்கடுத்த வருடம் அவர் நடித்த 'விக்ரம் வேதா' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.
அதன்பின் மூன்று வருடங்கள் கழித்து அவர் நடித்த “சைலன்ஸ், மாறா' ஆகிய படங்கள் கடந்த வருடம் ஓடிடியில் வெளிவந்தன. ஆனால், இரண்டுக்குமே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
அடுத்து 'ராக்கெட்ரி' படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மாதவன் தன்னுடைய 52வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இன்று அவருக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இருப்பினும் அவர் தமிழ்ப் படங்களில் மிகவும் தேர்வு செய்து நடிப்பது அவரது தீவிர ரசிகர்களுக்கு வருத்தமாகவே உள்ளது. வருடத்திற்கு ஒரு தமிழ்ப் படத்திலாவது அவர் நடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.