'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் பாஸ்ட்புட் கடையின் பிரீசர் அறைக்குள் மாட்டிக் கொண்ட இளம் பெண்ணாக நடித்து பாராட்டுகளை பெற்றவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள். தும்பா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி இருந்தபோது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள எட்டேரி என்ற தனது கிராமத்துக்கு சென்று விட்டார். அங்கு தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விவசாய பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.
இப்போது இரண்டாவது அலைத் தொற்று தீவிரமாக இருக்கும்போது மீண்டும் தனது கிராமத்திற்கே சென்று விவசாய வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டார். தான் வயலில் இறங்கி வேலை செய்யும் படங்களை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டுள்ள அவர் "மீண்டும் விவசாய பணியில் இறங்கி விட்டேன். மழையை கொடுத்த இறைவனுக்கு நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.