டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் |

கிரீடம், மதராசப்பட்டினம், தலைவா என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் தலைவி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து ஐஸ்வர்யா என்ற டாக்டரை 2019ல் இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த மே 30-ம்தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துருவா என்று பெயர் வைத்துள்ளனர். துருவா பிறந்து ஓராண்டு நிறை வடைந்ததையொட்டி முதல் பிறந்தநாளை கடந்த மே 30-ந்தேதி அன்று தங்களது வீட்டில் டைரக்டர் விஜய் - ஐஸ்வர்யா தம்பதியினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.




